

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மண்டல ஹாக்கி போட்டி கிருஷ்ணகிரியில் வரும் நவம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (28-ம் தேதி) காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
1.1.2003-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தகுந்த வயது சான்றிதழுடன் மைதானத்துக்கு நேரில் வரவேண்டும் என சென்னை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.