தனக்குப் பிடித்த விராட் கோலியின் ஒருநாள் சதம்: கங்குலி பகிர்வு

தனக்குப் பிடித்த விராட் கோலியின் ஒருநாள் சதம்: கங்குலி பகிர்வு
Updated on
1 min read

ஒருநாள் கிரிக்கெட்டில் 25 சதங்களையும் 37 அரைசதங்களையும் எடுத்துள்ள விராட் கோலியின் சதங்களில் சிறந்தது எது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஆங்கில இதழ் ஒன்றிற்கு கங்குலி இது பற்றி கங்குலி கூறும்போது, “விராட் கோலி நிறைய சதங்களை அடித்துள்ளார். பெரும்பாலான சதங்கல் மேட்ச் வின்னிங் சூழ்நிலையில் எடுக்கப்பட்டது. மேலும் 25 ஒருநாள் சதங்களை அவர் அதற்குள் எடுத்திருக்கும் போது ஒரு இன்னிங்சை குறிப்பிட்டுச் சொல்வது கடினம்தான். அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதும் கடினம்.

ஆனால் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஹோபார்ட்டில் இலங்கைக்கு எதிராக கோலி எடுத்த சதம் (86 பந்துகளில் 133) சிறப்பான இன்னிங்ஸ். நான் அந்த இன்னிங்ஸை நேரில் பார்த்தேன், அப்போது அவர் இளம் பேட்ஸ்மென். அவர் லசித மலிங்காவை அடித்து ஆடிய விதம் இன்னமும் மறக்க முடியாதது. விராட் களத்தில் இருக்கும் போது லசித் மலிங்காவே அவரது இயல்பல்லாத வேறொரு பவுலராக மாறிப்போனார்” என்றார் கங்குலி.

அன்று 36.3 ஓவர்களில் 320 ரன்களை விரட்டி முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை தக்க வைத்த மிகப்பெரிய இன்னிங்ஸ் கோலியுடையது.

மலிங்காவின் ஒரே ஓவரில் கோலி 24 ரன்களை விளாசினார். மலிங்கா அந்தப் போட்டியில் 96 ரன்கள் கொடுத்ததும் அப்போது பரவலாக பேசப்பட்டது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் மலிங்கா உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களையெல்லாம் தனது யார்க்கர்கள் மூலம் அப்போது கடுமையாகத் திணறடித்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இதுவரை 172 ஒருநாள் போட்டிகளில் 52.12 என்ற சராசரியில் 7,297 ரன்களை எடுத்துள்ளார். இதில் 682 பவுண்டரிகள் 73 சிக்சர்கள் அடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in