

கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமர் பானர்ஜி (92) நேற்று காலமானார்.
1956-ம் ஆண்டு மெல்பர்னில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு தலைமை வகித்தவர் சமர். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.