

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. 33 மற்றும் 39-வது நிமிடங்களில் வடாக்ஸ் இரு கோல்கள் அடிக்க முதல் பாதியில் மும்பை 2-0 என முன்னிலை பெற்றது. 51-வது நிமிடத்தில் டெல்லி வீரர் கட்ஸி முதல் கோலை அடித்தார்.
69-வது நிமிடத்தில் மும்பை 3-வது கோலை அடித்து டெல் லிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த கோலை நார்டி அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் டெல்லி வீரர் பாட்ஜி கோல் அடிக்க விறுவிறுப்பு அதிகமானது. 82-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பெரிரா கோலாக மாற்ற ஆட்டம் 3-3 என சமநிலையை எட்டியது. முடிவில் ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது.