வங்கதேச பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமனம்

வங்கதேச பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமனம்
Updated on
1 min read

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம், வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளராக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கூறும்போது, “டி 20 உலகக் கோப்பை வரை ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

46 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in