ஷோயப் மாலிக், கம்ரன் அக்மலுக்கு பாக்.கிரிக்க்கெட் வாரிய ஒப்பந்தம் மறுப்பு

ஷோயப் மாலிக், கம்ரன் அக்மலுக்கு பாக்.கிரிக்க்கெட் வாரிய ஒப்பந்தம் மறுப்பு
Updated on
1 min read

2014ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல் ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்லை.

மூத்த வீரர் யூனிஸ் கான் பி-வகைக்கு கீழிறக்கப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் பி-வகையிலிருந்து ஏ-வகைக்கு உயர்வு பெற்றுள்ளார்.

4 வகையாகப் பிரிக்கப்பட்ட ஒப்பந்த வீரர்கள் பட்டியல் வருமாறு:

ஏ-வகை: மிஸ்பா உல் ஹக், மொகமட் ஹபீஸ், சயீத் அஜ்மல், ஷாகித் அப்ரீடி, ஜுனைத் கான்

பி-வகை: யூனிஸ் கான், அகம்ட் ஷேஜாத், உமர் அக்மல், உமர் குல்

சி-வகை: ஆசாத் ஷபீக், அசார் அலி, அத்னன் அக்மல், குர்ரம் மன்சூர், நசீர் ஜாம்ஷெட், அப்துல் ரெஹ்மான்

டி-வகை: ஷோயப் மக்சூத், சர்பராஸ் அகமட், பிலாவல் பட்டி, ஷர்ஜீல் கான், சுல்பிகுர் பாபர், ஃபவாத் ஆலம், ஈஷான் அடில், மொகமட் இர்ஃபான், வஹாப் ரியாஸ், ரசா ஹசன், உமர் அமின், ஹேரிஸ் சோகைல், ரஹத் அலி, ஷான் மசூத், மொகமட் தால்ஹா, அன்வர் அலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in