Last Updated : 18 Oct, 2016 08:56 PM

 

Published : 18 Oct 2016 08:56 PM
Last Updated : 18 Oct 2016 08:56 PM

பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாக். உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கவும்: கம்பீர் காட்டம்

எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர் கூறியதாவது:

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை என்னால் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியமானது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் முழுதும் ஆமோதிக்கிறேன். ராணுவத்தில் உயிரிழந்தவர்கள் இடத்தில் தங்களை வைத்து ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். சிலர் தங்கள் வாரிசுகளை இழந்துள்ளனர், சிலர் தந்தையை எனும் போது இந்திய உயிர்கள்தான் முக்கியம்.

நாம் இந்தியர்களாக நம்மை நினைக்காத போது, நம் நாட்டினருக்காக நாம் சிந்திக்காத போது குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு நாம் அரசியலையும் பாலிவுட்டையும் கலக்கக்கூடாது, அரசியலையும் விளையாட்டையும் கலக்கக் கூடாது என்று பேசலாம். எனவே நம் இந்திய உயிர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரை மற்ற விஷயங்களை பின்னுக்குத் தள்ளுவது அவசியம் என்ற கருத்தை முழுதும் ஏற்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

கம்பீர் மட்டுமல்ல, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சேவாகும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x