புனேயில் ராணுவ விளையாட்டு போட்டி

புனேயில் ராணுவ விளையாட்டு போட்டி
Updated on
1 min read

சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ராணுவ விளையாட்டு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, நீச்சல், கத்திச்சண்டை, பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை நடக்கின்றன.

இப்போட்டியில் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் 11 முதல் 14 வயதினராக இருந்தால் பங்கேற்கலாம். இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய, ‘துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15’ என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in