Published : 23 Jun 2014 04:12 PM
Last Updated : 23 Jun 2014 04:12 PM

பேட்டிங்கில் இனி அடித்து ஆடப் போகிறேன்: தோனி திட்டவட்டம்

பேட்டிங்கில் இனி காத்திருந்து அடிக்கும் பாணியைத் தான் கடைபிடிக்கப்போவதில்லை என்றும் அடித்து ஆடவேப் போகிறேன் என்றும் தோனி கூறியுள்ளார்.

நேரத்தைக் கடத்தும் பேட்டிங் இனி இல்லை, அடித்து ஆடினால் மட்டுமே ரன்களை ஸ்கோர் செய்யமுடியும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று கூறுகிறார் தோனி.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தான் இன்னும் ஆக்ரோஷமான முறையில் பேட் செய்ய வேண்டும் அதுவே கைகொடுக்கும் என்று திட்டவட்டமாகப் பேசியுள்ளார் தோனி.

டெஸ்ட் போட்டிகளில் தோனி எப்போதும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையுடனேயே ஆடி வந்தார். ஆனால் அவரது பேட்டிங் உத்திகள் நீண்ட நேரம் நின்று விளையாடுவதற்குப் பொருத்தமாக இருப்பதில்லை. அவர் ஆக்ரோஷமாக அடித்து ஆடும்போதுதான் எதிரணியினருக்கு அச்சம் ஏற்படுகிறது.

அப்படியான ஆட்டத்தில்தான் அவர் சென்னையில் ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்து 224 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் இங்கிலாந்தில் அடித்து ஆடப்போகிறேன் என்கிறார் தோனி. இது இங்கிலாந்துக்கு லேசாக அச்சத்தை இந்நேரம் ஏற்படுத்தியிருக்கும்.

"எனது பேட்டிங்கை பொறுத்த மட்டில் நான் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆக்ரோஷம காட்ட வேண்டும். அந்த அணுகுமுறையே கைகொடுக்கும் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.

நான் சுதந்திரமாக ஆடும்போது நன்றாக ஸ்கோர் செய்கிறேன், ஒரு முறையான பேட்ஸ்மெனாக ஆடும்போது சோபிக்க முடியவில்லை.

நமது இயல்பான அட்டத்தில் நம்பிக்கை வைத்து ஆடுவதே சிறந்தது. சூழ்நிலை பற்றி அதிகம் சிந்திக்கக் கூடாது.

நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், காலத்தை ஓட்ட ஆடுவது கூடாது, அது என் வேலையில்லை. இந்த முறை நான் நிச்சயம் அதிகம் பவுண்டரிகளை அடிக்கவே முயல்வேன்.

என்று கூறுகிறார் தோனி.

இங்கிலாந்தில் ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் தோனி 429 ரன்களை 39 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரியே 38.77தான். அதை விட இங்கிலாந்தில் ஓரளவுக்கு நல்ல சராசரியை வைத்துள்ளார் தோனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x