

ராஞ்சியில் இந்திய அணியை குறைந்த இலக்கை எட்டவிடாமல் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ள நியூஸிலாந்து அணி சிறந்த ஒருநாள் அணி என்கிறார் சவுரவ் கங்குலி.
இது தொடர்பாக கொல்கத்தாவில் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்குலி கூறியதாவது:
நியூஸிலாந்து அணி சிறந்த அணி. சில போட்டிகளில் அவர்களும் வெற்றி பெறுவார்கள். ஆகவே நாம் அதற்கேற்ப உத்திகளை வகுக்க வேண்டும்.
விராட் கோலி அபாரமான வீரர், ஆனால் அவர் ஒருவரை மட்டும்தான் தற்போது இந்திய அணி நம்பியிருக்கிற்து என்று கூற இடமில்லை.
தோனி தொடர்ந்து 4-ம் நிலையில்தான் இறங்க வேண்டும். அந்த நிலையிலிருந்தே அவர் மேட்சை வெற்றிகரமான முடிவுக்கு இட்டுச் செல்ல முடியும். பினிஷர் என்பதால் பின்னால்தான் களமிறங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பினிஷர் பின்னால் இறங்க வேண்டும் என்பது தவறான அணுகுமுறை. விராட் கோலி 3-ம் நிலையில் இறங்கி வெற்றி பெறச் செய்யவில்லையா, எனவே பினிஷர் என்றால் 40-வது ஓவரில்தான் களமிறங்க வேண்டுமென்று நினைக்கத் தேவையில்லை.
இவ்வாறு கூறினார் கங்குலி.