

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர் ஹாக்கியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 12-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 6-வது நிமிடத்தில் மலேசியாவின் ரஹிம் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
58-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் ரூபிந்தர் பால் சிங் மீண்டும் கோல் அடிக்க இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 13 புள்ளிகளுடன் லீக் சுற்றில் முதல் இடத்தை பிடித்தது.