கே.எல்.ராகுலும் கேப்டன்சியும்: ஜிம்பாப்வே தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா?

கே.எல்.ராகுலும் கேப்டன்சியும்: ஜிம்பாப்வே தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா?
Updated on
1 min read

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் கே.எல்.ராகுல். அணியை திறம்பட வழிநடத்தி கேப்டனாக தனது முதல் வெற்றியை இந்தத் தொடரில் அவர் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அவரது கேப்டன்சி குறித்த சில புள்ளி விவரங்களை தெரிந்து கொள்வோம்.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. நாளை ( ஆகஸ்ட் 18) முதல் வரும் 22-ம் தேதி வரையில் இந்தத் தொடருக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழி நடத்தவுள்ளார்.

முன்னதாக, இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருந்தார். இருந்தும் கே.எல்.ராகுல் தனது உடற்திறனை நிரூபித்தக் காரணத்தால் அணியில் இடம்பிடித்தார். அதோடு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். கடந்த 2016 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுக வீரராக களம் கண்டார் ராகுல். இப்போது அதே அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட உள்ளார்.

கே.எல்.ராகுலும் கேப்டன்சியும்

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளை ராகுல் கேப்டனாக வழிநடத்தி உள்ளார்.
  • மொத்தம் 42 ஐபிஎல் போட்டிகளில் 20 வெற்றி மற்றும் 20 தோல்விகளை அவர் தலைமையிலான அணி சந்தித்துள்ளது. கேப்டனாக அவரது வெற்றி சதவிகிதம் 47.62.
  • கேப்டன்சி பொறுப்பில் இருந்து கோலி விலகிய பிறகு இந்திய அணியின் துணை கேப்டனாக இயங்கி வருகிறார் ராகுல்.
  • இதுவரையில் இந்திய அணியை 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் நடைபெற்றவை.
  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு ஃபார்மெட்டிலும் கேப்டனாக அரை சதம் பதிவு செய்துள்ளார் ராகுல்.
  • அவர் இந்திய அணியை வழிநடத்திய நான்கு போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. அதனால் ஜிம்பாப்வே தொடரில் அவரது தலைமையிலான அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in