ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி

ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது:

கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை.

டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க வேண்டும். உத்வேகம் முக்கியமானது. உத்வேகம் பெற முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

தொழில்பூர்வ கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக டெஸ்டிலிருந்து ஒருநாள் ஆட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது கடினமல்ல. இது மனரீதியாக மாற்றி அமைத்துக் கொள்வதுதான். சில சூழ்நிலைகளையும், காரணிகளையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் விஷயம்.

அணியில் புதிய வீரர்கள் வந்திருப்பது கண்டு உற்சாகமடைகிறேன். அனைவரும் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, புதுரத்தங்கள் அணிக்கு ஆற்றலை அதிகப்படுத்தும். இதில் சிலர் இந்தியா ஏ தொடரிலும் சிலர் ரஞ்சி கோப்பையிலும் நன்றாக ஆடியிருக்கின்றனர்.

உயர்நிலை கிரிக்கெட்டில் இத்தகைய வீரர்களுக்கு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை வழங்குவதே இத்தகைய முயற்சிகளின் நோக்கம்.

இவ்வாறு கூறினார் ரஹானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in