‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் வீரர் வில் ஸ்மீத்!

‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் வீரர் வில் ஸ்மீத்!
Updated on
1 min read

எட்ஜ்பாஸ்டன்: ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 20 வயதான இளம் வீரர் வில் ஸ்மீத் (Will Smeed). 49 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் மற்றொரு ஃபார்மெட் கிரிக்கெட்டாக அறியப்படுகிறது ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட். இதன் பெயரை போலவே ஒவ்வொரு அணியும் தலா 100 பந்துகள் (இன்னிங்ஸ்) மட்டுமே ஒரு போட்டியில் விளையாடும். இது இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு முதல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரட்’ இரண்டாவது சீசனில்தான் சதம் விளாசியுள்ளார் வில். இதுதான் இந்த ஃபார்மெட் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் சதம். பர்மிங்கம் பீனிக்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சதத்தை பதிவு செய்தார்.

50 பந்துகளை எதிர்கொண்ட அவர் மொத்தம் 101 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவர் இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in