

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என்று முன்னிலை வகிப்பதால் மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கும் அணியில் எந்தவித மாற்றமும் தேவையில்லை என்று இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது.
அஸ்வின், ஜடேஜா, ரெய்னா விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் ரெய்னா உடல்நிலை காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து இதே அணியை தக்கவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் அக்டோபர் 26-ம் தேதி 4-வது போட்டியும் பிறகு 29-ம் தேதி விசாகப்பட்டணத்தில் 5-வது, இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
இன்னும் ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி, மந்தீப் சிங் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.