

பர்மிங்கம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் ஆடவர் ஒற்றையர் டேபிஸ் டென்னிஸில் இந்தியாவின் சரத் கமல் தங்கப் பதக்கம் வென்றார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த டேபிஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சரத் கமலும், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்ட் மோதினர். இதில் 4-1 (11-13, 11-7, 11-2, 11-6, 11-8) என்ற நேர் செட் கணக்கில் சரத் கமல் வெற்றி பெற்றார்.
முன்னதாக ஆடவர் இரட்டையர் டேபிஸ் டென்னிஸில் சரத் கமல் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இதுவரை காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சரத் கமலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.