Published : 07 Aug 2022 07:47 PM
Last Updated : 07 Aug 2022 07:47 PM
16 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது. அதேபோல குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார். அவர், 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின் இயோ ஜியோ மின்னை தோற்கடித்தார். இதன் மூலம் பி.வி.சிந்துவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் முழு நேர முடிவில் 1-1 என்று கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
பெண்களுக்கான குத்துச்சண்டை 45-48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து இறுதிப்போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் முதல் தங்கப்பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியின் 48-51 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் வென்று அமீத் பங்கல் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இரண்டு தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது.
ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் எல்டோஸ் பால் தங்கப்பதக்கத்தையும் அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். எல்டோஸ் 17.03 மீ நீளமும் அப்துல்லா 17.02 மீ நீளமும் தாண்டி முதல் இரண்டு பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் 16.89 மீ நீளம் தாண்டி நான்காவது இடத்தை பிடித்ததும் இந்திய வீரரே பிடித்தார்.
ஆண்களுக்கான 10000 மீட்டர் ரேஸ் வாக்கில் 10 கிலோமீட்டரை 38.49.21 நிமிடத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சந்தீப் குமார். பெண்களுக்கான ஜாவலிங் த்ரோ போட்டியில் 60.00 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து ஷில்பா ராணி வெண்கலப் பதக்கம் வென்றார் .
குத்துச்சண்டையில் மூன்றாவது தங்கப்பதக்கம் இன்று கிடைத்துள்ளது. மகளிர் 48-50 கிலோ பிரிவில் நிகத் ஜரீன் இறுதிப்போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT