CWG 2022 | வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்லே, பிரியங்காவுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து

CWG 2022 | வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்லே, பிரியங்காவுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்லேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவினாஷ் சாப்லேயின் ராணுவத்துடனான தொடர்பு குறித்து குறிப்பிட்டுள்ள மோடி, சாப்லேயுடனான தமது சமீபத்திய உரையாடலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பது: "அவினாஷ் சாப்லே ஒரு சிறந்த இளைஞர். ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராணுவத்துடனான தனது தொடர்பு, பல தடைகளை அவர் எவ்வாறு சமாளித்தார் என்பது பற்றிய எங்களின் சமீபத்திய உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறோம். அவரது வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா கோஸ்வாமிக்கு வாழ்த்து:

அதேபோல், 10,000 ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக்கிங்க் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரேஸ்வாக் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துப்பதிவில், " நமது தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்தப் பதக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ள பல இளைஞர்களை இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்துள்ளார். வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டட்டும். #Cheer4India" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in