Last Updated : 06 Aug, 2022 06:38 AM

 

Published : 06 Aug 2022 06:38 AM
Last Updated : 06 Aug 2022 06:38 AM

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 7-வது சுற்று ஆட்டத்தில் நேற்று ஓபன் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ – இந்தியா சி அணிகள் மோதின. இதில் இந்தியா ஏ அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹரிகிருஷ்ணா - கங்குலி சூர்யா சேகர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. விதித் குஜராத்தி - எஸ்.பி.சேதுராமன் மோதிய ஆட்டம் 43-வது நகர்வில் டிரா ஆனது. அர்ஜுன் எரிகைசி குப்தாஅபிஜீத்தை தோற்கடித்தார். அதேவேளையில் நாராயணன் அபிமன்யுவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி 2 புள்ளிகளை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா பி அணியானது 3.5-0.5 என்ற கணக்கில் கியூபாவை தோற்கடித்தது. டி.குகேஷ் 46-வது நகர்த்தலின் போது கேப்ரேரா கார்லோஸ் டேனியலை வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா 41-வது நகர்த்தலில் ஆர்டிஸ் சுவாரஸ் இசான் ரெனால்டோவை தோற்கடித்தார். சரின் நிகல் 52-வது நகர்த்தலில் கியூசாடா பெரெஸ்லூயிஸ் எர்னஸ்டோவை வீழ்த்தினார். அதேவேளையில் அல்மேடா குயின்டானா ஓமருக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார் அதிபன்.

மகளிர் பிரிவில் கிரீஸ் அணி 2.5-1.5என்ற கணக்கில் இந்திய பி அணியைவென்றது. இந்திய பி அணியின் வந்திகா அகர்வால், சோலாகிடோ ஸ்டாவ்ரூலாவிடமும், சவுமியா சாமிநாதன், அவ்ரமிடோ அனஸ்டசியாவிடமும் தோல்வியடைந்தனர். கோம்ஸ் மேரி அன், பாவ்லிடோ கேதரினிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். திவ்யா தேஷ்முக், மார்க்கண்டோனாகி ஹரிடோமெனியை வீழ்த்தினார்.

இந்தியா ஏ அணி 2.5-1.5 என்றகணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்தது. கோனேரு ஹம்பி, மம்மட்ஸாதாவிடம் தோல்வியடைந்தார். ஹரிகா துரோணவல்லி, கானிமுக்கு எதிரானஆட்டத்தை டிரா செய்தார்.ஆர்.வைஷாலி, கோவரைவீழ்த்தினார். தானியா சச்தேவ் ஃபதலியேவ உல்வியாவை தோற்கடித்தார். இந்தியா சி அணி3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்றது. ஈஷா கரவாடே, லீனா ஜார்ஜஸ்குவையும் பி.வி.நந்திதா, ஹக்கிமிஃபர்ட் கஜலையும் தோற்கடித்தனர். அதேவேளையில் பிரத்யுஷா, குண்டுலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் விஷ்வாவஸ்னாவாலா, ஸ்டோரிக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர்.

கடினமாக இருந்தது

வெற்றி குறித்து இ ந்திய ஏ அணியின் வைஷாலி கூறும்போது, “ஆட்டம் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆட்டத்தை டிராவில் முடிக்கலாம் என கருதினேன். ஆனால் அதன் பின்னர் கடுமையாக போராடி வெற்றி பெற்றேன். அணிக்கு தேவையான தருணத்தில் யாரேனும் ஒருவர் வெற்றி தேடிக்கொடுத்து வருகிறோம். இது சிறப்பானதும், மகிழ்ச்சியும் கூட” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x