

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர். மகளிருக்கான ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளி வென்றார்.
போட்டியின் 7-வது நாளான நேற்று மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட்டில் மாலத்தீவுகளின் பாத்திமத் நபாஹாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.