

உலக கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து கடந்த ஆண்டு பிரியா விடைபெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வியாழக்கிழமை 41-வது வயதில் அடியெடுத்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிய சச்சின், தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் வாக்களித்துவிட்டேன். நீங்கள் வாக்களித்துவிட்டீர்களா?” என கேட்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கின. பல்வேறு நாட்டு கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித் துள்ள வாழ்த்துகளின் விவரம்:
விராட் கோலி:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்னை கிரிக்கெட் விளையாட தூண்டியது உங்களின் ஆட்டம்தான். நீங்கள் எப்போதும் ஜாம்பவான்தான்.
ரோஹித் சர்மா:
பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் இன்பம் பொங்கட்டும். இப்போதும் உங்களுடன் டிரெஸ்ஸிங் அறையை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கௌதம் கம்பீர்:
பிறந்த நாள் வாழ்த்துகள் சச்சின். இந்த பிறந்த நாள் உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
ஸ்ரீசாந்த்:
எனது கிரிக்கெட் கடவுளே, பிறந்த நாள் வாழ்த்துகள்.
மைக்கேல் வாஹன்
(முன்னாள் இங்கிலாந்து கேப்டன்): வாழ்த்துகள் சச்சின். உங்களுக்கு பிடித்தவகையில் பிறந்த நாளை கொண்டாடுங்கள்.
ரஸல் அர்னால்டு
(முன்னாள் இலங்கை வீரர்): வாழ்த்துகள். நீங்கள் நீண்டகாலம் வாழ கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும்.