Published : 03 Aug 2022 06:30 AM
Last Updated : 03 Aug 2022 06:30 AM

செஸ் ஒலிம்பியாடில் 18-ம் முறையாக பங்கேற்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடும் அதிக வயதான வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மொனாக்கோவின் ஜூலியா லேபிள். 78 வயதான ஜூலியா 1982-ம் ஆண்டு தொடக்கம் வரை அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி உள்ளார்.

தொடர்ந்து 1982-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பிரான்ஸ் அணிக்காக விளையாடினார். 2002 முதல் தற்போது வரை மொனாக்கோ அணிக்காக விளையாடி வருகிறார் ஜூலியா.

தற்போது 18-வது முறையாக ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ளார் ஜூலியா லேபிள். இவர் 4 முறை அர்ஜெண்டினா மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பிலும், 3 முறை பிரான்ஸ் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட்டில் நேற்றைய 5-வது சுற்றில் ஜூலியா வெற்றி பெற்றார். 3வது சுற்றில் அவர், வெளியே அமரவைக்கப்பட்டிருந்தார். 4 சுற்றுகளில் விளையாடிய ஜூலியா 2 வெற்றி, 2 தோல்வியை பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x