CWG 2022 | தங்கம் வென்றார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி

CWG 2022 | தங்கம் வென்றார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி
Updated on
1 min read

பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி (Achinta Sheuli). இது நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

20 வயதான அச்சிந்தா ஷூலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். 73 கிலோ எடைப் பிரிவில் அவர் விளையாடி வருகிறார். காமன்வெல்த் போட்டியில் இதே எடைப்பிரிவில் அவர் பங்கேற்றார். இதற்கு முன்னர் 2021 ஜூனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கமும் வென்றுள்ளார்.

இந்நிலையில், காமன்வெல்த்தில் பங்கேற்றார் அவர். இதுதான் அவர் விளையாடும் முதல் காமன்வெல்த் போட்டி தொடர் இதுவாகும். இதில் மொத்தம் 313 கிலோ எடையை தூக்கியதன் மூலம் தங்க பதக்கத்தை தட்டி தூக்கியுள்ளார் அவர். ஸ்னாட்ச் முறையில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 170 கிலோவும் தூக்கியிருந்தார். மொத்தம் 313 கிலோகிராம். இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் அவர்.

இந்தியா இதுவரை வென்றுள்ள மூன்று தங்கப் பதக்கங்களும் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்தவை. முன்னதாக, மீராபாய் சானு மற்றும் ஜெரமி லால்ரினுங்கா ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in