Published : 27 Jul 2022 05:14 PM
Last Updated : 27 Jul 2022 05:14 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போதைய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்துள்ளார். இந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை ‘தல’ என அன்போடு ரசிகர்கள் அழைப்பது வழக்கம். அவர் மிகவும் அரிதாகவே சமூக வலைதளங்களில் காட்சி கொடுப்பார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரலையில் யதேச்சையாக தோனி இணைந்துள்ளார். வெறும் சில நொடிகள் மட்டுமே காட்சி தந்த தோனி, எதுவும் பேசாமல் நேரலை இணைப்பை துண்டித்தார்.
அப்போது பந்த் உடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களும் நேரலையில் இணைந்திருந்தனர். “மாஹி (தோனி) பாய், நேரலையில் கொஞ்ச நேரம் இணைந்திருங்களேன்” என பந்த் சொன்ன அடுத்த நொடி ரிப்ளை ஏதும் கொடுக்காமல் இணைப்பை துண்டித்தார் தோனி.
இந்த வீடியோ கிளிப்பிங் இணையத்தில் வைரலானது. குறிப்பாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பலரும் அதனை ரீ-ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.
That was some live for cricket fraternity #MSDhoni #RishabhPant #RohitSharma #SuryakumarYadav #CricketTwitter @ImRo45 @surya_14kumar @RishabhPant17 pic.twitter.com/i6jUCzyAie
Sign up to receive our newsletter in your inbox every day!