

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. மார்லோன் சாமுவேல்ஸ் 42 ரன் எடுத்தார். இமாத் வாசிம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எளிதான இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் பாகிஸ்தான் டி 20 தொடரை 3-0 என கைப்பற்றியது.