Published : 26 Jul 2022 03:58 PM
Last Updated : 26 Jul 2022 03:58 PM
விசாகப்பட்டினம்: தனது பிரசவத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்தில் மீண்டும் தான் கம்பேக் கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை சினேகா தீப்தி. அதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான கிரிக்கெட் வீராங்கனை சினேகா. கடந்த 2013 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானவர். சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக 16 வயது 204 நாட்களில் அறிமுகமான இளம் வீராங்கனை என அறியப்படுகிறார் அவர். ஸ்மிருதி மந்தனா உடன் இணைந்து கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவரது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
இந்த இடைப்பட்ட காரணத்தில் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்போது அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் அவர்.
“நான் கருவுற்றது தெரிந்ததும் கிரிக்கெட் களத்தில் மீண்டும் என்னால் கம்பேக் கொடுக்க முடியும் எனது கணவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இந்த ஓராண்டு காலத்தை விடுப்பு காலமாக கருத சொன்னார். குழந்தை பிறந்ததும் இரண்டே மாதத்தில் பயிற்சிக்கு திரும்பலாம் எனத் தெரிவித்தார். முதலில் அது வேடிக்கையாக இருந்தது.
ஆனால் எனது மகள் பிறந்து இப்போது 8 மாதங்கள் கடந்துவிட்டது. நான் மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT