Published : 15 Jun 2014 08:31 AM
Last Updated : 15 Jun 2014 08:31 AM

இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலி

உலகக் கோப்பை கால்பந்து பிரிவு-டி போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை 2௧ என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இத்தாலி வீரர்கள் கிளாடியோ மர்சீசியோ மற்றும் மரியோ பாலோடெல்லி ஆகியோர் கோல்களை அடிக்க இங்கிலாந்து தரப்பில் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் ஒரு கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சீசி ஒரு வேகமான ஷாட்டை அடிக்க தாழ்வாக அந்த முதல் கோல் விழுந்தது. ஆனால் அடுத்த 2 நிமிடங்களில் இங்கிலாந்தின் ரகீம் ஸ்டெர்லிங் மற்றும் வெய்ன் ரூனி ஒரு அருமையான மூவைச் செய்து இத்தாலிய கோல் எல்லைக்குள் பந்தை கொண்டு வந்து ரூனி அருமையான ஒரு பாசைச் செய்ய அதனை டேனியல் ஸ்டர்ரிட்ஜ் கோலாக மாற்றினார்.

பிறகு இடைவேளைக்குப் பிறகு 5 நிமிடங்கள் கழித்து இத்தாலி வீரர் அன்டோனியோ கான்ட்ரீவா அடித்த ஒரு லகுவான பாஸை பாலோடெல்லி தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

இந்தத் தோல்வியை அடுத்து உருகுவே அணியை வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து ஜூன் 19ஆம் தேதி களமிறங்க நேரிடும். உருகுவேயை கோஸ்டா ரிக்கா 3௧ என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்ததால், அடுத்த போட்டியில் இரு அணிகளில் ஒன்று வெற்றிபெற்றேயாகவேண்டும், டிரா ஆனால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற இதே பிரிவில் மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்த அணிகளின் விதி நிர்ணயிக்கப்படும்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 9 கார்னர்கள் இங்கிலாந்துக்கு கிடைத்தது. அதனை கோல்களாக மாற்ற முடியவில்லை. ஆனால் இத்தாலி இங்கிலாந்தின் 7 கோல் முயற்சிகளைத் தடுத்தது. இத்தாலியும் அதிக கோல்களை அடித்திருக்கும் ஆனால் 7 முறை ஆஃப் சைடு என்று அந்த அணி அத்துமீறியது. இங்கிலாந்து தரப்பில் அத்துமீறல் இல்லை.

மொத்தம் 18 ஷார்ட்களை இங்கிலாந்து அடித்தது. இலக்கை நோக்கி 8 ஷாட்களை அடித்தது. ஆனால் இத்தாலியின் தடுப்பு அரண் இங்கிலாந்தை எழும்ப விடாமல் செய்தது.

இத்தாலி அணி இங்கிலாந்தின் பலவீனத்தை பயன்படுத்தும் விதமாக வலது புறத்தில் நெருக்கடி கொடுத்தது. இதனால் இடைவேளைக்கு முன்பே இங்கிலாந்து வீரர்கள் களைப்படைந்து விட்டனர். ஒரு கோல் அடித்தாலும் இத்தாலி வலது புறமாக தாக்குதல் தொடுப்பதை வெய்ன் ரூனியால் கூட ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. இத்தாலி அடித்த 2வது கோல் கூட வலது புறத் தாக்க்குதலால் விளைந்ததே.

ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் ரூனி ஒரு முயற்சி செய்தார் அதுவும் கை கூடவில்லை. காய நேரத்தை ஈடுகட்டும் கடைசி நிமிட ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஆண்ட்ரியே பிர்லோ அடித்த 30 யார்ட் ஃப்ரீ கிக் கோலாக மாறியிருக்கும் ஆனால் அது கோல் போஸ்டில் பட்டுச் சென்றது.

இங்கிலாந்தை தொடர்ந்து வலது புறத்திலிருந்து சிக்கலுக்கு உள்ளாக்கிய இத்தாலி வீரர் ஆண்டனியோ காண்ட்ரிவா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x