ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு: காமன்வெல்த் போட்டியிலிருந்து தனலெட்சுமி நீக்கம்

ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு: காமன்வெல்த் போட்டியிலிருந்து தனலெட்சுமி நீக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4x100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில்கலந்து கொள்ள இருந்தார்.

வரும் 28ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தனலெட்சுமிக்கு வெளிநாட்டில் உலக தடகள அமைப்பு நடத்தியசோதனையில் அவர், ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிரிப்பிள் ஜம்ப் வீராங்கனையான ஐஸ்வர்யா கடந்த ஜூன் மாதம்சென்னையில் நடை பெற்ற தேசியசீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

அப்போது தேசியஊக்கமருந்து தடுப்பு முகமை ஐஸ்வர்யாவிடம் நடத்திய சோதனையில் அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தனலெட்சுமியும், ஐஸ்வர்யா பாபுவும் காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in