Published : 20 Jul 2022 08:25 PM
Last Updated : 20 Jul 2022 08:25 PM

‘செஸ் போர்டு’ நேப்பியர் பாலத்தில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ‘க்ளிக்ஸ்’

சென்னை: செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சதுரங்கப் பலகை வடிவில் கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. 16 வயதான அவர் கடந்த 2018 வாக்கில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர். கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான சதுரங்க தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இவர் வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், சதுரங்க விளையாட்டின் திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் நடைபெறுவதை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள நேப்பியர் பலத்திற்கு சதுரங்கப் பலகை வடிவில் கருப்பு, வெள்ளை நிறத்தில் சதுரம் சதுரமாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அவர் நேப்பியர் பாலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனியாகவும், தனது சகோதரி உடனும், தாய் மற்றும் சகோதரி உடனும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார் அவர். அதனை கவனித்த பலரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x