Published : 19 Jul 2022 06:09 AM
Last Updated : 19 Jul 2022 06:09 AM

நீச்சலில் தங்கம் வென்றார் நடிகர் மாதவன் மகன் வேதாந்த்

வேதாந்த் மாதவன்

புவனேஷ்வர்: புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சிறுவர்களுக்கான குரூப்1-ல் 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் மாதவன் பந்தய தூரத்தை 16:01.73 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் மகாராஷ்டிரா சார்பில் வேதாந்த் களமிறங்கியிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அத்வைத் பந்தய தூரத்தை 16:06.43 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.

இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் வேதாந்த். 16:21:98 விநாடிகளில் இலக்கை அடைந்த கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷ் வெள்ளிப் பதக்கமும், மேற்கு வங்கத்தின் சுபோஜித் குப்தா (16:34:06) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x