பேட்ஸ்மெனை ஏமாற்றும் வித்தையை நெஹ்ராவிடமிருந்து கற்றேன்: புவனேஷ் குமார்

பேட்ஸ்மெனை ஏமாற்றும் வித்தையை நெஹ்ராவிடமிருந்து கற்றேன்: புவனேஷ் குமார்
Updated on
1 min read

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார், பேட்ஸ்மென்களை எப்படி ஏமாற்றுவது என்ற வித்தையை தனக்கு ஆஷிஷ் நெஹ்ரா கற்றுக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணியை தோற்கடித்த பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் நாளை ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆஷிஷ் நெஹ்ரா காயமடைந்ததினால் சன் ரைசர்ஸின் பந்து வீச்சு பொறுப்பைச் சுமந்த புவனேஷ் குமார், நெஹ்ராவிடமிருந்து தான் கற்றுக் கொண்டதைப் பற்றி கூறும்போது,

“களவியூகத்தை எப்படி பேட்ஸ்மெனுக்குத் தக்கவாறு அமைப்பது, பேட்ஸ்மெனின் பலம் என்ன, அவரை எப்படி ஏமாற்றுவது என்பது போன்ற விஷயங்களை நெஹ்ராவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

இதைத்தான் இளம் வீச்சாளர் பரீந்தர் சரணுக்கு நான் எடுத்துக் கூறினேன். ஆனாலும் நெஹ்ரா தனது அனுபவத்தினால் கற்றுச் செய்ததை என்னால் உடனடியாகச் செய்ய முடியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன். இருப்பினும் அவர் அணிக்காக என்ன பங்காற்றினாரோ அதே பங்கை நானும் ஆற்ற முயற்சி செய்தேன்.

நாம் என்ன களவியூகம் அமைக்கிறோம் என்பதை பேட்ஸ்மென்கள் பார்த்து அதன் படி அவர்கள் எப்படி ஆடுவது என்பதைத் தீர்மானிக்கின்றனர். ஆனால் அதிக போட்டிகளில் ஆடுவதன் மூலம் நாம் செட் செய்த பீல்டுக்கு எதிராக பவுலிங் செய்து பேட்ஸ்மெனின் சிந்தனைப் போக்கை திசைத்திருப்புவது என்பது இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம், ஆனால் இது சில வேளைகளில் நமக்கு எதிராகக் கூட மாறும். ஆனால் ஏதோ ஒரு வகையில் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in