Last Updated : 11 May, 2016 09:28 AM

 

Published : 11 May 2016 09:28 AM
Last Updated : 11 May 2016 09:28 AM

பெங்களூரு- மும்பை இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

பெங்களூரு அணிக்கு இது 10-வது ஆட்டமாகும். அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற வேண்டுமானால் தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டிய நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் பெங் களூரு தோல்வியை எதிர்கொண் டால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கடினமாகிவிடும். இந்த தொடரில் 561 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி கடந்த ஆட்டத்தில் சோபிக்க தவறினார். 2 சதங்கள், 4 அரை சதங்கள் விளாசி உள்ள அவர் சொந்த மைதானத்தில் இன்று மிரட்டக்கூடும்.

டி வில்லியர்ஸூடன் ராகுலும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவராக உள்ளார். ஆல்ரவுண்டராக வாட்சன் சிறந்த பங்களிப்பை வழங்குகிறார். பந்து வீச்சில் அவருடன் யுவேந்திரா ஷாகல் மட்டுமே நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார். ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கின்றனர். இவர்கள் முன்னேற்றம் கண்டால் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் இருக்காது.

மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது. அந்த அணிக்கும் இது 10-வது ஆட்டமாகும். 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள மும்பை அணி தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும்.

பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள அணிகள் அதிக புள்ளிகளை வைத்துள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை அணி சற்று மெனக்கெட வேண்டியதுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் மீதமுள்ள 3 ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x