Published : 13 Jul 2022 04:54 AM
Last Updated : 13 Jul 2022 04:54 AM
லண்டன்: மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து தனது 2-வது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான நார்வே அணியை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இரவு தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிரைட்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
யூரோ கால்பந்து வரலாற்றில் ஆடவர், மகளிர் என எந்த ஒரு ஆட்டத்திலும் இதற்கு முன்னர் 8 கோல்கள் அடிக்கப்பட்டது இல்லை. அந்த வகையில் இங்கிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. அந்த அணி தரப்பில் பெத் மீட் 34, 38 மற்றும்81-வது நிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.
அதேவேளையில் எலன் ஒயிட் 29 மற்றும் 41-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஸ்டான்வே (12-வது நிமிடம்), ஹெம்ப் (15-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவை தோற்கடித்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT