“பவுலிங்கில் ஆப்ஷன்களே இல்லாத இந்திய அணிக்காக வருந்துகிறேன்” - டி20 உலகக் கோப்பை குறித்து வாகன்

“பவுலிங்கில் ஆப்ஷன்களே இல்லாத இந்திய அணிக்காக வருந்துகிறேன்” - டி20 உலகக் கோப்பை குறித்து வாகன்
Updated on
1 min read

லண்டன்: "இந்திய கிரிக்கெட் அணியை எண்ணி நான் வருந்துகிறேன். பவுலிங்கில் அவர்களுக்கு ஆப்ஷன்கள் இல்லை" என டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan) கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில்தான் அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் வாகன் தெரிவித்துள்ளார்.

"இந்தியா திறமையான அணியாகும். டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாகவும் அவர்கள் உள்ளார்கள். ஆனால் அணிச் சேர்க்கை விவகாரத்தில் அவர்கள் சிறந்ததொரு வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

இந்திய அணிக்கு உள்ள பவுலிங் ஆப்ஷன் குறித்து மட்டும்தான் என்னுடைய கவலைகள் எல்லாம் உள்ளன. அந்த யூனிட் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஐந்து பவுலர்கள் மற்றும் ஆறு பேட்ஸ்மேன்கள் என அவர்கள் எப்போதும் விளையாடுவதாக எனக்கு தெரிகிறது.

டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் பவுலராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும். அதில் இப்போது ஹர்திக் உள்ளார். அதனால் லைன் அப்பில் மாற்றம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பவுலிங் ஆப்ஷன் இல்லாததால் நான் வருந்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in