Published : 07 Jul 2022 06:27 AM
Last Updated : 07 Jul 2022 06:27 AM

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-16, 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் கா-யூனிடம் தோல்வியடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-8, 21-9 என்ற நேர் செட்டில் கவுதமாலாவின் கெவின் கார்டானை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x