Published : 11 May 2016 04:58 PM
Last Updated : 11 May 2016 04:58 PM

ஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க்

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார்.

இந்த மாத இறுதியில் ஹாங்காங் பிளிட்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் ஆடவுள்ளார்.

2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் பெயர் இதுவரை பெரிதாக தடம்பதியவில்லை.

இந்நிலையில் எங்கிருந்தாவது கரியரைத் தொடங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான மைக்கேல் கிளார்க் ஹாங்காங்கில் தொடங்கவிருக்கிறார்.

கிளார்க்கின் மூலம் ஹாங்காங் கிரிக்கெட்டை மேம்படுத்த அவரை இங்கு விளையாட ஒப்பந்தம் செய்தது உதவும் என்று ஹாங்காங் கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x