Published : 25 May 2016 10:45 AM
Last Updated : 25 May 2016 10:45 AM

கூடைப்பந்தில் கேரளா வெற்றி

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கேரளா போலீஸ் அணி 56-52 என்ற புள்ளி கணக்கில் பிலாஸ்பூர் தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியைத் தோற்கடித்தது.

ஆடவர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி ஏர்போர்ஸ் 82-46 என்ற கணக்கில் பிலாஸ்பூர் தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியையும், கபுர்தலா ஆர்சிஎப் 78-66 என்ற கணக்கில் திருவனந்தபுரம் கேஎஸ்இபியை அணியையும், லோனவில்லா இந்தியன் நேவி 64-43 என்ற கணக்கில் சென்னை ஐசிஎப் அணியையும் வீழ்த்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x