Published : 05 Jul 2022 05:39 AM
Last Updated : 05 Jul 2022 05:39 AM

எலோர்டா கோப்பை குத்துச் சண்டை போட்டி - கலைவாணிக்கு வெள்ளிப் பதக்கம்

கலைவாணி

புதுடெல்லி: கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் எலோர்டா கோப்பை குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அல்ஃபியா பதான் 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் லாசத் குங்கீபயே வாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கிதிகா, சக நாட்டைச் சேர்ந்த கலைவாணி ஸ்ரீனிவாசனை எதிர்த்து விளையாடினார். இதில் கிதிகா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த கலைவாணி, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜமுனா போரா 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்தமோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x