கிரிக்கெட் சூதாட்ட விசாரணைகள் முக்கியமானவை: சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் சூதாட்ட விசாரணைகள் முக்கியமானவை: சச்சின் டெண்டுல்கர்
Updated on
1 min read

ஐசிசி நடத்தி வரும் கிரிக்கெட் சூதாட்ட விசாரணைகள் கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையை பேணிகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுல்ல சச்சின் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது இவ்வாறு கூறியுள்ளார்.

“அக்கறையுள்ளவர்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏனெனில் இது கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையைக் காப்பதற்கு அவசியம், நியாயமான போட்டியைப் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சச்சின்.

மேற்கிந்திய வீரர் லாராவுடன் சேர்ந்து விளையாடுவது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் ஒரே அணிக்கு ஆடியுள்ளோம், இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியுள்ளோம், இந்த முறையும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்ப்போம் என்று நம்புகிறேன்.

அவருக்கு எதிராக விளையாடுவதை மகிழ்ச்சியுடன் அணுகியுள்ளேன், பிரையன் லாரா மற்ற நாடுகளுக்கு எதிராக ரன்கள் எடுப்பதை மகிழ்வுடன் ரசித்துப் பார்ப்பேன், ஆனால் இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடும்போது அல்ல” என்றார் சச்சின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in