

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் புனே எப்சி அணிக்காக இரு இளம் இந்திய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விங்கரான ஸோடிங்லியானா ரால்டி மற்றும் கோல் கீப்பர் விஷால் கெய்த் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மிசோரமை சேர்ந்த 21 வயதான ஸோடிங்லியானா ஐஎஸ்எல் தொடரில் கடந்த 2014-ல் குவாஹாட்டி அணிக்காகவும், 2015-ல் டெல்லி அணிக்காகவும் விளையாடியிருந்தார். களத்தில் பல்வேறு நிலைகளில் விளையாடும் திறன் கொண்டவர்.
இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான விஷால் கெய்த், 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு ஐ லீக் தொடரில் ஷில்லாங் லஜாங் எப்சி கிளப்பில் இணைந்து தனது திறனை மேம்படுத்திக்கொண்டார்.