Published : 01 Jul 2022 02:53 PM
Last Updated : 01 Jul 2022 02:53 PM

‘கேப்டன் பொறுப்பு’ - தோனி உடன் உரையாடிய நினைவுகளைப் பகிர்ந்த இந்திய கேப்டன் பும்ரா

எட்ஜ்பாஸ்டன்: இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என தோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளும் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ தொடரை வெல்லும்.

இந்நிலையில், முன்னாள் கேப்டன் தோனிக்கும், தனக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார் பும்ரா.

"அழுத்தங்கள் நிறைந்த தருணத்தில் கிடைக்கும் வெற்றியின் ருசி அருமையாக இருக்கும். எப்போதுமே பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருப்பவன். சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொள்ள விரும்புபவன். நான் பல்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் பேசியுள்ளேன். அனைவரும் தங்களை சிறப்பான வீரர்களாக மேம்படுத்திக் கொண்டதையும் பார்க்கிறேன்.

இந்த நேரத்தில் எனக்கு முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் நடந்த உரையாடல்தான் நியாபகம் வருகிறது. இந்திய அணிக்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என தோனி என்னிடம் சொன்னார். இப்போது அவர் தலைசிறந்த கேப்டனாக அறியப்படுகிறார்.

அதனால் என்னால் அணிக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன். வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை. இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பை எனக்கு கிடைத்த கவுரமாக பார்க்கிறேன்" என பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

ஆடும் லெவன் விவரம்…

இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா: சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்)."இந்த போட்டிக்கு நாங்கள் தயாராகி உள்ள விதத்தை என்னை மகிழ்கிறேன். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் நாங்கள் விளையாடுகிறோம்" என டாஸ் வென்றதும் தெரிவித்திருந்தார் பும்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x