Published : 25 Jun 2014 09:31 AM
Last Updated : 25 Jun 2014 09:31 AM

நெதர்லாந்து ஹாட்ரிக் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் சிலியை வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையுடன் நாக் அவுட் சுற்றில் விளையாட இருக்கிறது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து சிலி அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் சாவ் பாவ்லோ நகரில் நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதனால் இரு அணிகளுக்குமே எளிதில் கோல் கிடைக்கவில்லை. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி முடிந்தது.

2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலைதான் நீடித்தது. ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. அந்த அணியின் லிராய் பெர் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. சிலி வீரர்கள் பதில் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதனால் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெல்லும் என்ற சூழ்நிலை உருவானது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்தின் டிபே கோல் அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x