Published : 30 Jun 2022 05:55 AM
Last Updated : 30 Jun 2022 05:55 AM

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, காஷ்யப்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேவேளையில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 33-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கிடம் 11-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 39-ம் நிலை வீரரான இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஹீயோ வாங்கை தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x