Published : 30 Jun 2022 05:59 AM
Last Updated : 30 Jun 2022 05:59 AM

சென்னையில் ஜூலை 5 முதல் தேசிய குத்துச்சண்டை

சென்னை: இளையோருக்கான 5-வது தேசிய ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 33 மாநில பிரிவுகளைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து மகளிர் பிரிவில் 12 எடைப் பிரிவிலும், ஆடவர் பிரிவில் 13 எடைப் பிரிவிலும் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில்லோஷினி (சென்னை), பூவிதா (புதுக்கோட்டை), மதுமிதா (திருவள்ளூர்), ஜீவா (புதுக்கோட்டை), ஸ்நேகா (திருச்சி), மாலதி (புதுக்கோட்டை), அனுசுயா (காஞ்சிபுரம்), ஸ்ரீநிதி (சென்னை), எம்.மதுமிதா (திருவள்ளூர்), ஜெயஸ்ரீ (திருவள்ளூர்), அபிநய சரஸ்வதி (திருவள்ளூர்), பிரிஸ்கிலா (கன்னியாகுமரி) ஆகியோர் பல்வேறு எடைப் பிரிவில் களமிறங்குகின்றனர்.

அதேவேளையில் ஆடவர் பிரிவில் யுவேஸ்வரன் (சென்னை), விஸ்வஜித் (கோவை), நவீன்குமார் (சென்னை), கவியன் (திருவள்ளூர்), திருநாவுக்கரசு, சுபாஷ்வசந்த், தில்லி பாபு, கபிலன், பூபாலன் (சென்னை), தியாகராஜன் (திருவள்ளூர்), லோஷன் (சென்னை), ஸ்ரீவெங்கடேஷ் (கடலூர்), சாம் பால் ராஜ் (திருவள்ளூர்) ஆகியோர் பங்கேற்கின்றனர். இத்தகவலை தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலாளார் எம்.எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x