சென்னையில் இன்று இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி பங்கேற்கும் டி 20 போட்டி

சென்னையில் இன்று இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி பங்கேற்கும் டி 20 போட்டி
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடத் தப்படுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங் கை உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரையொட்டி இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக் கெட் அணியை பிரபலப்படுத்தும் விதமாக சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள லயோலா கல்லூரி மைதானத்தில் இன்று டி 20 கிரிக் கெட் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன், ரோட்டரி கிரிக்கெட் அணி மோதுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் 11 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரோட்டரி சங்கம், சாலஞ்சர்ஸ் கிரிக் கெட் சங்கம் ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. போட்டியை காண அனுமதி இலவசம். இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியை விஜயையும், ரோட்டரி அணியை விஷியும் கேப்டனாக வழிநடத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in