

புதுடெல்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், நேற்று விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
இங்கிலாந்து நாட்டின் விதிமுறைகள்படி அங்கு தரையிறங்குபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை.
இதனால் மயங்க் அகர்வால் தேவைப்படும் பட்சத்தில் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்.