Published : 27 Jun 2022 09:06 PM
Last Updated : 27 Jun 2022 09:06 PM

உலக டெஸ்ட் சாம்பியனை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து: புதிய சகாப்தத்தை தொடங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ்

லீட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்துள்ளது இங்கிலாந்து அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து. புதிய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது அந்த அணி.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என புதுப்பாய்ச்சலோடு இந்த தொடரை அணுகி இருந்தது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ், டிரெண்ட் பிரிட்ஜ் மற்றும் லீட்ஸ் என மூன்று மைதானங்களில் இந்தத் தொடர் நடைபெற்றது. மூன்றிலும் வரிசையாக வாகை சூடியது இங்கிலாந்து.

ஜோ ரூட், பேர்ஸ்டோ, போப், பென் ஸ்டோக்ஸ், பாட்ஸ், லீச், பிராட், ஆண்டர்சன் போன்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்த தொடருக்கு முன்னர் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது இங்கிலாந்து அணி. உள்நாடு, வெளிநாடு என எங்கு சென்றாலும் தோல்வி என்ற நிலை மட்டும் இங்கிலாந்துக்கு மாறவில்லை.

இதே நியூசிலாந்து அணி கடந்த 2021 வாக்கில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. அப்படி உதை வாங்கி வந்த இங்கிலாந்து அணி தான் இப்போது பலம் வாய்ந்த அணியாக இப்படி மாறியுள்ளது.

அதுவும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓவர்களில் 299 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கை விரட்டி பிடித்து அசத்தி இருந்தது இங்கிலாந்து அணி. அதற்கும், இப்போதைய 3-0 வெற்றிக்கும் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் தான் காரணம் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக இங்கிலாந்து அணி வரும் ஜூலை 1-ஆம் தேதி அன்று இந்திய அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த ஆறுதல் என்னவென்றால் அது மிட்செலின் ஆட்டம். 3 போட்டிகளில் விளையாடி 538 ரன்களை சேர்த்திருந்தார் அவர். இதில் 3 சதம் மற்றும் 2 அரை சதமும் அடங்கும். அதன் மூலம் அவர் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

— England Cricket (@englandcricket) June 27, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x