TNPL | ஹரி நிஷாந்த், விஷால் கலக்கல் பேட்டிங்: கோவையை வீழ்த்தியது திண்டுக்கல் அணி

TNPL | ஹரி நிஷாந்த், விஷால் கலக்கல் பேட்டிங்: கோவையை வீழ்த்தியது திண்டுக்கல் அணி
Updated on
1 min read

நெல்லை: லைக்கா கோவை கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. திண்டுக்கல் அணிக்காக ஹரி நிஷாந்த் மற்றும் விஷால் வைத்யா சிறப்பாக பேட் செய்திருந்தனர். அந்த அணி இமாலய இலக்கை இந்த போட்டியில் சேஸ் செய்து வென்றுள்ளது.

நடப்பு டிஎன்பிஎல் தொடர் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் ஞாயிறு (ஜூன் 26) அன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட் செய்த கோவை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டியது திண்டுக்கல் அணி.

கலக்கல் தொடக்கம்: திண்டுக்கல் அணிக்காக கேப்டன் ஹரி நிஷாந்த் மற்றும் விஷால் வைத்யா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஹரி நிஷாந்த், 36 பந்துகளில் 60 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மணி பாரதி, விஷால், மோகித், ராஜேந்திரன் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இருந்தாலும் 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது திண்டுக்கல் அணி. நடப்பு சீசனில் அந்த அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது. இந்த போட்டியில் திண்டுக்கல் வீரர் விஷால் 49 ரன்கள் எடுத்திருந்தார். மற்றொரு வீரரான ராஜேந்திரன் பிரதீப் 10 பந்துகளில் 22 ரன்களை விளாசியிருந்தார். பிரதீப் 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்ட நாயகன் விருதை ஹரி நிஷாந்த் பெற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in