Published : 23 Jun 2022 03:38 PM
Last Updated : 23 Jun 2022 03:38 PM

THE 6IXTY | கிரிக்கெட்டின் புதிய ஃபார்மெட் - ‘வியத்தகு’ விதிமுறைகள் என்னென்ன?

செயின்ட் ஜான்ஸ்: கிரிக்கெட் விளையாட்டில் 'THE 6IXTY' என்ற ஃபார்மெட்டை அறிமுகம் செய்துள்ளது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக் (CPL). இந்த ஃபார்மெட் கிரிக்கெட் விளையாட்டில் புதுப் பாய்ச்சலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1877-இல் கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தப் போட்டி விளையாடப்பட்டு சுமார் 145 ஆண்டுகள் கடந்த நிலையில் 'THE 6IXTY' என்ற ஃபார்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அப்படியே ஒருநாள், டி20, டி10 என கமர்ஷியல் வடிவம் பெற்றது. இப்போது அது மற்றொரு வடிவத்தை பெற்றுள்ளது.

THE 6IXTY ஃபார்மெட்டின் முதல் எடிஷன் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது விதமான முயற்சிகளின் மூலம் டி10 கிரிக்கெட்டை மாற்றும் வகையில் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீகின் கூட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபார்மெட்டின் புதிய விதிகள்

  • பேட்டிங் செய்யும் அணிகளுக்கு அதிகபட்சம் ஆறு விக்கெட்டுகள் வழங்கப்படும். ஆறாவது விக்கெட் வீழ்ந்தால் ஆல் அவுட் ஆனதாக எடுத்துக் கொள்ளப்படுமாம்.
  • பேட்டிங் செய்கிற ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பவர்பிளே ஓவர்கள் உண்டாம். முதல் 12 பந்துகளில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் விளாசினால் மூன்றாவது பவர்பிளேவினை பேட்டிங் செய்யும் அணிகள் அன்-லாக் செய்ய முடியுமாம். அதை 3 முதல் 9-வது ஓவருக்குள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் பாதியில் 30 பந்துகளும் ஒரே எண்டிலிருந்து பந்து வீசப்படுமாம். அடுத்த 30 பந்துகளுக்கு மற்றொரு எண்ட் பயன்படுத்தப்படுமாம்.
  • ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சம் ஒரு பவுலர் 2 ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பந்துகளில் 5 ஓவர்களாக வீசப்படுமாம்.
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணிகள் 60 பந்துகளையும் வீச தவறினால் கடைசி 6 பந்துகளின்போது ஒரு ஃபீல்டர் வெளியேற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர்கள் ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிஸ்ட்ரி ஃப்ரீ ஹிட்டாக தேர்வு செய்வார்களாம். அந்த சமயத்தில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாக முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x