டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஐதராபாத் அணி

டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஐதராபாத் அணி
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின் றன.

ஐதராபாத் அணி 10 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும்.

எந்த ஆண்டும் இல்லாமல் இம்முறை ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான அணியாக உள்ளது. வார்னர் தனது அதிரடியால் தனிந பராக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி தேடிக்கொடுப்ப வராக உள்ளார். அவர் விரைவில் ஆட்டமிழக்கும் பட்சத்தில் ஷிகர் தவண், வில்லியம்சன், ஹென்ரிக், தீபக் ஹூடா, நமன் ஓஜா ஆகியோர் கைகொடுக்கின்றனர்.

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, முஸ் டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரை அடங்கிய வேகக்கூட்டணி எந்த வகையிலான பேட்டிங் வரிசையையும் மிரட்டும் வகையில் திகழ்கிறது. இவர்கள் சொந்த மண்ணில் இன்று டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

டெல்லி அணி 9 ஆட்டத்தில், 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. குயிண்டன் டி காக், ஜாகீர்கான், சஞ்சு சாம்சன், கருண் நாயர், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதிக இளம் வீரர் களை கொண்ட டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி தரக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in